ETV Bharat / bharat

நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

டெல்லியில் இருந்து சிட்னி நோக்கி சென்று கொண்டு இருந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் சென்று கொண்டு இருந்த போது திடீரென குலுங்கியதால் 7 பயணிகள் காயம் அடைந்தனர்.

Air India
Air India
author img

By

Published : May 17, 2023, 5:18 PM IST

டெல்லி : நடுவானில் பறந்து கொண்டு இருந்த டெல்லி - சிட்னி ஏர் இந்தியா விமானம் திடிரென குலுங்கியதால் பயணிகள் காயம் அடைந்தனர்.

தலைநகர் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. நடுவானில் விமானம் சென்று கொண்டு இருந்த போது திடீரென குலுங்கியது. திடீரென விமானம் குலுங்கியதால் பதறிப் போன பயணிகள், அலறல் சத்தமிட்டனர். இந்த சம்பவத்தில் ஏறத்தாழ 7 பயணிகளுக்கு லேசான சுளுக்கு உள்ளிட்ட காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானத்தில் இருந்த முதலுதவி கிட் மூலம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு, காயம் அடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஏர் இந்திய நிறுவனத்தின் B787-800 விமானம் VT-ANY operating flight AI-302, என்ற விமனாம் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்ற போது திடிரென கடுமையாக குலுங்கியது.

இதையும் படிங்க : Adani Case: அதானி முறைகேடு புகார் : 3 மாதங்களில் அறிக்கை அளிக்க செபிக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அளவுக்கு எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் மூன்று பயணிகள் மட்டும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிட்னியில் உள்ள ஏர் இந்தியா விமான நிலைய மேலாளர், பயணிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டு உள்ளது.

காயம் அடைந்தவரகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக டிஜிசிஏ மற்றும் ஏர் இந்தியா விமான சிப்பந்திகள் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து சிட்னி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட நிலையில், மருத்துவ உதவி தேவைப்படும் பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான ஊழியர் தெரிவித்து உள்ளார்.

மோசமான வானிலை காரணமாக விமானம் குலுங்கியதாக கூறப்படும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நடுவானில் விமானம் குலுங்கிய நிலையில், விமானியின் துரித நடவடிக்கையால் அனைத்து பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

கடந்த சில நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்ற பயணி மீது தேள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டு இருந்த விமானத்தில் திடீரென பயணியை தேள் கொட்டியது. விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் பயணி சிகிச்சை பெற்றார்.

இதையும் படிங்க : மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை... கேரள அரசு அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.