ETV Bharat / bharat

விமானப் படை தலைமை தளபதி பதவுரியா ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம்

நல்லெண்ண அடிப்படையில் விமானப் படை தலைமை தளபதி பதவுரியா ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

Air Chief Marshal Bhadauria
Air Chief Marshal Bhadauria
author img

By

Published : Aug 1, 2021, 8:56 AM IST

உலகின் செல்வாக்கு மிக்க வளைகுடா நாடுகள் - இந்தியா இடையே வளர்ந்து வரும் ஆரோக்கியமான உறவை பிரதிபலிக்கும் வகையில், விமானப் படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ் பதவுரியா ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய முக்கிய வளைகுடா நாடுகளுக்கு பயணித்த நிலையில், தற்போது பதவுரியா பயணம் மேற்கொண்டுள்ளார்

இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் பதவுரியா இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தப் பயணம் மேலும் வலுப்படுத்தும் என்றும் அரசு தரப்பில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஐக்கிய அரபு அமீரகத்துடனான இந்தியாவின் உறவு பெருமளவில் வலுவடைந்துள்ளது.

முன்னதாக ஐக்கிய அரபு அமீரக விமானப்படை பிரான்சிலிருந்து இந்தியா வந்த ரஃபேல் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பி உதவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முத்தலாக் தடை சட்டம் 2ஆம் ஆண்டு நிறைவு: ஆக.01 இனி ’இஸ்லாமிய பெண்கள் உரிமை நாள்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.