ETV Bharat / bharat

புதுவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவி: போட்டியின்றித் தேர்வாகும் என்.ஆர். காங்கிரஸ் ஆறுமுகம்? - புதுவை

புதுச்சேரி: சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (ஆக.21) தொடங்கிய நிலையில், என்.ஆர் காங்கிரஸ் ஆறுமுகம் போட்டியின்றித் தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்.ஆர். காங்கிரஸ் ஆறுமுகம்
என்.ஆர். காங்கிரஸ் ஆறுமுகம்
author img

By

Published : Aug 22, 2021, 10:16 AM IST

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸுக்கு முதலமைச்சர், மூன்று அமைச்சர்கள், துணை சபாநாயகர், அரசு கொறடா, பாஜகவுக்கு சபாநாயகர், இரண்டு அமைச்சர்கள், பாராளுமன்ற செயலர் ஆகிய பதவிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து புதுவை சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த செல்வம் போட்டியின்றி ஏக மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த ஜூன் 16ஆம் தேதி சபாநாயகராக பதவி ஏற்றார்.

புதுவை சட்டப்பேரவை
புதுவை சட்டப்பேரவை

ஆகஸ்ட் 26ஆம் தேதி தேர்தல்

புதுவையில் வரும் 26ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. அன்றைய தினம் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என சபாநாயகர் செல்வம் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், துணை சபாநாயகர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் நேற்று (ஆக.21) தொடங்கியது. புதுவை சட்டப்பேரவை நடைமுறை, அலுவல் நடத்தை விதிகளில் விதியின் 10(2)இன் கீழ் நியமன சீட்டுகள் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி புதன்கிழமை மதியம் 12 மணி வரை பேரவை செயலாளரால் பெற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி வரும் 25ஆம் தேதி மதியம் 12 வரை துணை சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்யலாம்.

ஒருவருக்கு மேல் மனு தாக்கல் செய்தால் தேர்தல் நடைபெறும் அல்லது ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்தால் அவர் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு செய்யப்படுவார். இதற்கான அறிவிப்பை சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவையில் வெளியிடுவார்.

என்.ஆர். காங்கிரஸ் ஆறுமுகம்
என்.ஆர். காங்கிரஸ் ஆறுமுகம்

என்.ஆர் காங்கிரஸ் தரப்பில் துணை சபாநாயகர் பதவிக்கு ஏ.கே.டி.ஆறுமுகம் மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அவர் போட்டியின்றித் தேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை விரைவில் கூட உள்ளதால் அரசு கொறடா, பாராளுமன்ற செயலர் பதவிகளும் நிரப்பப்பட்டு ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்

புதுச்சேரி காங்கிரசில் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த ஏ.கே.டி.ஆறுமுகம், இரண்டு முறை என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமியை எதிர்த்து காங்கிரசில் சார்பில் நின்று தோற்றவர் ஆவார்.

ஆனால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸிருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் ஆறுமுகம் இணைந்த நிலையில், ரங்கசாமியின் கோட்டையான இந்திரா நகரில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் புதுவையின் 30 தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை ஆறுமுகம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கல்யாண் சிங்: காவிமயமான அரசியல்வாதியின் கதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.