டெல்லியில் காற்றின் தர குறியீடு மாசுபாடு காரணமாக 326 என்னும் நிலையைக் கொண்டுள்ளது. இதனால், எங்கு பார்த்தாலும், புகைப்படலம் போர்த்தியதுபோல் காட்சியளிக்கிறது. குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்று மாசு கடுமையான நிலையை எட்டியுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) கருத்துப்படி, ஓக்லா கட்டம் 2ஆவது பகுதியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமாக' இருந்தது. ஓக்லா பகுதி அருகே வசிக்கும் தடகள வீரர் ஒருவர், "ஒரு தடகள வீரராக இருப்பதால் காற்றின் தரம் மாசுபடுவதை என்னால் உணர முடிகிறது. காற்று மாசுபாட்டால் சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது. இதனால், நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஷாஹதாராவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் மிக மோசமான நிலையில் காற்று மாசு இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக கடந்த 11ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 'புதிதாக அமைக்கப்பட்ட காற்று தர மேலாண்மை ஆணையம் டெல்லியில் மாசுபாட்டைக் குறைக்கும் என்று நான் நம்புகிறேன். காற்று மாசுபாட்டு அளவைக் குறைக்க 85,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க: யாரை திருப்திபடுத்த இந்த புத்தகத்தை நீக்கினார்கள்: ஜனநாயகத்திற்கு விரோதமான செய
ல்