திருவனந்தபுரம் : கேரள வேளான் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாக்டர் அனி தாஸ் (வயது 59). அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் விவசாயம் மற்றும் பயிர் சாகுபடி குறித்து ஒளிபரப்பப்படும் கிரிஷி தர்ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நேரலையில் பேசிக் கொண்டு இருந்த நிலையில், திடீரென நிலை குலைந்து அனி தாஸ் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து, அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நிகழ்ச்சி நேரலையில் திடீரெ மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது என்பது அண்மைக்காலங்களில் அடிக்கடி நடக்கும் ஒன்றாக மாறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு ஐஐடி கான்பூரின் மாணவர்கள் விவகார துறை தலைவர் சமீர் கந்தேகர், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உடல் ஆரோக்கியம் குறித்து சொற்பொழிவு கொடுத்துக் கொண்டு இருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவர்கள் முன்னிலையில் பேசிக் கொண்டு இருந்த அவருக்கு திடீரென உடல் வியர்ந்து கொட்டத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நிலை குலைந்த அவர் மேடையிலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய ஏயுவி கண்டுபிடித்த மாயமான ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள்!