புவனேஸ்வர்: பிறந்த நாள் கொண்டாடட்டத்திற்காக இந்தியாவுக்கு சுற்றுலா வந்த புதின் எதிர்ப்பு விமர்சகரான ரஷ்ய எம்.பி. பவெல் ஆன்டன்வ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் ஒடிசாவில் உள்ள தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டனர். இரு நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இரு ரஷ்யர்கள் உயிரிழந்த நிலையில், சம்பவம் குறித்து சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேலும் ஒரு புதின் எதிர்ப்பு விமர்சகர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான போரை கண்டித்து ரஷ்யாவில் இருந்து வெளியேறிய நபர், கடந்த சில நாட்களுக்கு முன் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் அதிபர் புதினுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பிளக்கார்டுகளை சுமந்து கொண்டு நிதி உதவி திரட்டி வந்தார்.
அவர் குறித்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அதில் ரஷ்யரிடம் விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருந்ததாகவும், அவருக்கு ஆங்கிலம் சரிவர தெரியாத காரணத்திலும் விட்டுவிட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிபர் புதினுக்கு எதிராக விமர்சனங்களில் ஈடுபட்ட நபர் மாயமானதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரு ரஷ்யர்கள் உயிரிழந்த நிலையில், காணாமல் போன நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா பணியில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை; நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!