டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 18) 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மதுபோதையில் தனது காதலுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தன்னுடைய மணிகட்டை அறுத்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைக்கண்ட பாதசாரிகள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே நைனிடால் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதன்பின் போலீசார் மருத்துவமனைக்கு சென்று பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த இளம்பெண் லக்னோவைச் சேர்ந்தவர். நேற்று தனது பெண் தோழியுடன் சுற்றிப்பார்பதற்காக நைனிடால் வந்தார். அந்த நேரத்தில் மது அருந்திவிட்டு தனது காதலனுக்கு போன் செய்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரத்தில் மணிகட்டை அறுத்துக்கொண்டார். இப்போது மருத்துவமனையில் நலமாக உள்ளார். அவரது வீட்டிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கிய இளைஞர்கள்... 5 பேர் கைது...