தம்தாரி: சத்தீஸ்கர் மாநிலம், மகாசமுந்த் தொகுதியின் முன்னாள் பாஜக எம்பியான சந்துலால் சாஹுவின் மகன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். திருமணமாகி நான்கு ஆண்டுகளில் அவர் இறந்ததாகத் தெரிகிறது. அப்போது அவருக்கு ஒன்றரை வயதில் மகன் இருந்தான்.
இந்த நிலையில், சுமார் 7 ஆண்டுகளாக கணவரை இழந்து, மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் மருமகள் கல்யாணிக்கு திருமணம் செய்து வைக்க சந்துலால் சாஹு முடிவு செய்தார். மருமகள் மற்றும் பேரனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தார்.
அதன்படி, தனது மனைவியை இழந்து மகளுடன் வாழ்ந்து வந்த டாக்டர் கஞ்சீருக்கும், மருமகள் கல்யாணிக்கும் திருமணம் செய்து வைத்தார். தம்தாரியில் உள்ள விந்தியவாசினி கோயிலில் திருமணம் நடந்து முடிந்தது.
கல்யாணியைவிட சிறந்த வாழ்க்கைத் துணையை தன்னாள் கண்டுபிடித்திருக்கமுடியாது என டாக்டர் கஞ்சீர் தெரிவித்தார். இதுகுறித்து கல்யாணி கூறுகையில், "இந்த முடிவில் எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்தது. ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் தனியாக வாழ்ந்த பிறகு, எனக்கு ஒரு வாழ்க்கைத்துணை கிடைத்துள்ளது" என்றார்.
தங்களது குடும்பம் இப்போது முழுமையடைந்துவிட்டதாக மணமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "காதல் கேட்குதா?" பெற்ற மகளை செல்பி வீடியோ எடுத்து கொலை செய்த தந்தை!