ETV Bharat / bharat

முலாயம் சிங்கிடம் ஆசி பெற்ற அபர்ணா யாதவ்!

பாஜகவில் இணைந்த கையோடு தனது மாமனாரும் சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங்கிடம் அபர்ணா யாதவ் ஆசி பெற்றார்.

Aparna Yadav
Aparna Yadav
author img

By

Published : Jan 21, 2022, 7:23 PM IST

லக்னோ : சமாஜ்வாதியின் நிறுவனர் முலாயம் சிங்கிடம் அவரது இளைய மருமகளும், அண்மையில் பாஜகவில் இணைந்தவருமான அபர்ணா யாதவ் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில், முலாயம் சிங் யாதவ் காலில் விழுந்து அபர்ணா யாதவ் ஆசிர்வாதம் வாங்குகிறார். தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில் அபர்ணா யாதவ், “பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர் ஆன நிலையில் தந்தையும், தலைவருமான முலாயம் சிங்கிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அபர்ணா யாதவ் முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ்வின் மனைவி ஆவார். இவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். அப்போது பெண்களின் இடஒதுக்கீட்டுக்காக போராடுவேன்” என்று தெரிவித்திருந்தார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அபர்ணா யாதவ் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். 403 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் முதல்கட்டமாக வாக்குப்பதிவு பிப்.10ஆம் தேதி நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி இடையே கடும் போட்டி நிலவுகிறது. மறுபுறம் காங்கிரஸூம் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Aparna Yadav Exclusive: பாஜகவில் இணைந்தது ஏன்? அபர்ணா யாதவ் பிரத்யேகப் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.