ஆந்திரா: ஆந்திர மாநிலம், திருப்பதியின் வைகுண்டபுரத்தில் கழிவுநீர் குழியில் இறங்கிய தூய்மைப்பணியாளர் ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் உள்ள பாதாள சாக்கடைக்குள் சுத்தம் செய்வதற்கு இரண்டு பணியாளர்கள் கயிறு கட்டி இறங்கினர். அதில் இருந்து திடீரென வெளிப்பட்ட விஷவாயு தாக்கியதில் ஆறுமுகம் என்னும் நபர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
பணியில் ஈடுபட்டிருந்த மேலும் இரு பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஆவடியில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் - அமைச்சர் கே.என்.நேரு