ETV Bharat / bharat

முன்னாள் முதலமைச்சருக்கு அன்பழகன் கண்டனம் - ஈடிவி பாரத்

விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக துணைநிலை ஆளுநரின் அறிவிப்பிற்கு எதிராகக் கருத்தினைத் தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக செயலாளர் அன்பழகன் கண்டனம்
அதிமுக செயலாளர் அன்பழகன் கண்டனம்
author img

By

Published : Sep 6, 2021, 4:10 PM IST

புதுச்சேரி: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக துணைநிலை ஆளுநரின் அறிவிப்பிற்கு எதிரான கருத்தினைத் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விநாயகர் சதுர்த்தி என்பது இந்து சமயம் சம்பந்தப்பட்ட ஒரு விழாவாகும். இந்தியாவில் மகாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவினை பொது இடங்களில் கொண்டாடலாம் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதேபோன்று புதுச்சேரி மாநிலத்திலும் துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதிலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் துணைநிலை ஆளுநரை நாராயணசாமி குறை சொல்கிறார். துணைநிலை ஆளுநரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கேற்ப துணைநிலை ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மக்கள் மத்தியில் இது ஏன் அதிர்ச்சி அடைய வைக்கப்போகிறது? நாராயணசாமியின் தற்போதைய சந்தர்ப்பவாத கருத்துதான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்காலில் பிரசித்திப் பெற்ற சனீஸ்வரன் கோயில் திருவிழாவை கரோனா தொற்று நோய் உச்சத்தில் இருந்தபோது அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரத்துசெய்தார். அந்த விழாவை நாராயணசாமி நடத்தினார்.

பட்ஜெட் அறிவிப்புகளை மூன்றே மாதத்தில் செயல்படுத்த வேண்டுமென வாய்கூசாமல் பேசுகிறார். பட்ஜெட் என்பது ஆண்டுக்கு ஒருமுறை என்பதையும் மறந்துவிட்டு அரசுக்கு மூன்று மாதம் கெடுவிதிப்பது வியப்பாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'சம்சாரம் இல்லாமல் வாழலாம்; மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.