ஹைதராபாத்: கடந்த செப்டம்பர் 2 அன்று ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டு உள்ள முதல் விண்கலம் ஆகும்.
-
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
👀Onlooker!
Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwy
">Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 7, 2023
👀Onlooker!
Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwyAditya-L1 Mission:
— ISRO (@isro) September 7, 2023
👀Onlooker!
Aditya-L1,
destined for the Sun-Earth L1 point,
takes a selfie and
images of the Earth and the Moon.#AdityaL1 pic.twitter.com/54KxrfYSwy
இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல பிரமுகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து ஆதித்யா எல் 1 விண்கலம் செலுத்தப்பட்டதற்கு மறுநாள் (செப் 3), ஆதித்யா எல் 1 விண்கலம் நல்ல நிலையில் இருப்பதாகவும், எப்போதும் போன்று இயங்கி வருவதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று (செப் 7) பூமி மற்றும் நிலவை ஆதித்யா எல் 1 விண்கலத்தில் பொருத்தப்பட்டு உள்ள கேமரா மூலம் செல்பி எடுத்து உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “ஆதித்யா எல் 1, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான எல் 1 புள்ளி என்பதை இலக்காகக் கொண்டு உள்ளது. இந்த விண்கலம், பூமி மற்றும் நிலவின் புகைப்படத்தை செல்பியாக எடுத்து உள்ளது” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்டு உள்ள புகைப்படத்தில், VELC மற்றும் SUIT என்ற இரு பாகங்களை இஸ்ரோ சுட்டிக் காட்டி உள்ளது. இதில் VELC என்பது காணக்கூடிய உமிழ்வு வரி கரோனாகிராஃப் என்றும், SUIT என்பது சூரிய புற ஊதா உருவம் எனவும் அழைக்கப்படுகிறது.
முன்னதாக, ஆதித்யா எல்1 விண்கலத்தை, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், செப்டம்பர் 2 அன்று காலை 11.50 மணிக்கு இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. தொடர்ந்து, புவி ஈர்ப்பு விசையைத் தாண்டிய பிஎஸ்எல்வி சி-57 மூன்று கட்டங்களை தாண்டி விண்ணில் வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது என்றும், ராக்கெட் மூன்று கட்டங்களை வெற்றிகரமாக தாண்டிய நிலையில், அதில் இருந்து பூஸ்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 61 நிமிடங்களில் நிலை நிறுத்தப்பட உள்ளதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இஸ்ரோவால் நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனையடுத்து, இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவில் தரையிறங்கி நிலவின் தென் துருவத்தை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.
இந்த சாதனையால், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் தரையிறங்கியதில் 4வது இடத்தையும், நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக முதலில் விண்கலம் அனுப்பியதில் முதல் இடத்தையும் இந்தியா பிடித்து உள்ளது. மேலும், ஆகஸ்ட் 23ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: Solar exploration: இதுவரை சூரிய ஆய்வு - பட்டியலில் இருப்பது எந்தெந்த நாடுகள்.!