ETV Bharat / bharat

சுப்பிரமணியன்சுவாமி இல்லத்திற்கு ‘Z' பிரிவு பாதுகாப்பு!

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன்சுவாமியின் இல்லத்திற்கு ‘z' பிரிவு பாதுகாப்பு வழங்கவுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரமணிய சுவாமி இல்லத்திற்கு ‘Z' பிரிவு பாதுகாப்பு...!

author img

By

Published : Nov 3, 2022, 10:12 PM IST

டெல்லி: முன்னாள் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன்சுவாமி இல்லத்திற்கு 'z' பிரிவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தன் வீட்டிற்கு சரியான பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டுமென சுப்பிரமணியன்சுவாமியால் கோரப்பட்ட மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா முன்னிலையில் வைக்கப்பட்டது. அப்போது அரசு தரப்பில், அவருக்கு 'z' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக முன்வைக்கப்பட்டது. அத்துடன் சேர்த்து ஓர் கூடுதல் வாக்குமூலத்தையும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சுப்பிரமணியன்சுவாமி தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் மேஹ்தா, சுப்பிரமணியன்சுவாமியின் பங்களா சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வருகிற சனிக்கிழமை(நவ.5) 'z' பிரிவு பாதுகாப்புப்படையினர் ஒப்படைக்கப்படுவர் எனத்தெரிவித்தார்.

மேலும், சுப்பிரமணியன்சுவாமியின் சொந்த இல்லத்திற்குப்பாதுகாப்பு இன்னும் அளிக்கப்பட வேண்டுமென்றும், சுவாமி தனது அரசு பங்களாவை விட்டு வெளியேற அக்.26 கடைசி நாளாக அளிக்கப்பட்டது. இதையடுத்து, சுப்பிரமணியன்சுவாமியின் சொந்த வீட்டிற்குப்பாதுகாப்பு அளிக்கப்படுவதாக ஒன்றிய அரசு கடந்த அக்.31 நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அப்போது, மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன்சுவாமிக்கு ‘z' பிரிவு பாதுகாப்பு நிச்சயம் வழங்கப்படுமெனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சரியான வசதி செய்துதர முடியாதபட்சத்தில் ஆறு பாதுகாவலர்கள் சுழற்சி முறையில் அவரது இல்லத்தில் பணியமர்த்தப்படுவரென்றும் அரசு தரப்பு வழக்கறிஞரால் தெரிவிக்கப்பட்டது.

கடந்த அக்.14 சுப்பிரமணியன்சுவாமியை தனது அரசாங்க பங்களாவை, (அதற்கான கால அவகாசமான ஐந்து ஆண்டுகள் முடிவிற்கு வந்ததால்) திருப்பித் தர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தன் பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு தனக்கு மீண்டும் அரசு பங்களாவைத் தர வேண்டுமென நீதிமன்றத்தை சுப்பிரமணியன்சுவாமி நாடினார். அதை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவர் தனது இல்லத்திலேயே ‘z' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுமென அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட தம்பதி - பலியான 3 வயது குழந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.