ETV Bharat / bharat

லட்சத்தீவு நிர்வாகியை விமர்சித்த கேரள நடிகை மீது தேசத்துராக வழக்கு பதிவு! - பிரபுல் படேலை விமர்சித்த கேரள சமூக ஆர்வலர்

எர்ணாகுளம் (கேரளா): நடிகையும் சமூக ஆர்வலருமான ஆயிஷா சுல்தானா, பிரபுல் படேலை ’பயோ வெப்பன்’ என விமர்சித்ததோடு, தான் குறிப்பிட்ட நாட்டையோ அல்லது அரசாங்கத்தையோ பற்றி பேசவில்லை என தனது நேர்காணலில் தெளிவுபடுத்தியிருந்தார்.

ஆயிஷா சுல்தானா
ஆயிஷா சுல்தானா
author img

By

Published : Jun 11, 2021, 11:20 PM IST

லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதர், நடிகையும் சமூக ஆர்வலருமான ஆயிஷா சுல்தானா மீது கவரட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது தற்போது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கே பட்டேலை ’பயோ வெப்பன்’ (உயிரியல் ஆயுதம்) என ஆயிஷா வர்ணித்த நிலையில் முன்னதாக காதர் அவர் மீது புகார் தெரிவித்திருந்தார். ஊடக நேர்காணல் ஒன்றில் இது குறித்துப் பேசிய ஆயிஷா, ”உலகின் பிற நாடுகளுக்கு எதிராக சீனா கரோனா வைரஸைப் பயன்படுத்தியது போலவே, லட்சத்தீவுக்கு எதிரான ஒரு ஆயுதமாக மத்திய அரசு பிரபுல் பட்டேலை பயன்படுத்தியது” என்று கூறியிருந்தார்.

மேலும், தான் பிரபுல் பட்டேலை மட்டுமே குறிப்பிட்டு பேசுவதாகவும், குறிப்பிட்ட நாட்டையோ அல்லது அரசாங்கத்தையோ பற்றி பேசவில்லை என்றும் அவர் அந்த நேர்காணலில் தெளிவுபடுத்தியிருந்தார். இந்நிலையில் ஆயிஷா மீது தற்போது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

முன்னதாக, லட்சத்தீவில் உள்ள கலாச்சாரக் குழுக்கள், ஆயிஷாவுடன் உறுதியாக நிற்பதாகவும், அவரது கூற்றை தேசத்துரோகம் என்று சித்தரிக்க முயல்வது தவறானது என்றும் கூறியுள்ளன. அண்மையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் பட்டேல் மீது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் புகார் அளிக்க வந்தனர்.

குஜராத் மாநிலத்தின் உள் துறை துணை அமைச்சராக விளங்கிய பிரபுல் பட்டேல், லட்சத்தீவு நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பின்பு, அவரது தொடர்ச்சியான நிர்வாக முடிவுகளும், கொள்கை மாற்றங்களும் மாநிலத்தில் குழப்பங்களை விளைவிப்பதாகவும், உள்ளூர் மக்களும் இந்த மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது,

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.