ETV Bharat / bharat

புதிதாக 2,487 பேருக்கு கரோனா தொற்று - 13 பேர் பலி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 487 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது.

COVID-19
COVID-19
author img

By

Published : May 15, 2022, 1:09 PM IST

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், "கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 487 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 214 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 98 புள்ளி 7 சதவீதமாக உள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 79 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1 புள்ளி 2 சதவீதமாக உள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 692 ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 191 கோடியே 32 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்ட்ரா மாநிலத்திலும், அதற்கு அடுத்து கேரள மாநிலத்திலும் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட மொத்த கரோனா உயிரிழப்புகளில் 70 சதவீத இறப்புகள் இணை நோய் காரணமாகவே ஏற்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறைகளில் விஐபி சலுகை ரத்து- பஞ்சாப் அரசு அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.