ETV Bharat / bharat

நாட்டில் 96.77 லட்சமாக அதிகரித்த கரோனா பாதிப்பு

ஹைதராபாத்: இதுவரை நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 96 லட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்றுவரை (டிச. 06) நான்கு லட்சமாகக் குறைந்துள்ளது, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91.39 லட்சமாக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Dec 7, 2020, 12:31 PM IST

Updated : Dec 7, 2020, 4:03 PM IST

நாட்டில் கரோனா பாதிப்பு 96 லட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதேபோல் குணமடைந்தோரின் எண்ணிக்கை 91 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தொற்றிலிருந்து மீண்டோரின் விகிதம் 94.45 விழுக்காடாக இருக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய கரோனா பாதிப்பாளர்கள் 32 ஆயிரத்து 981 ஆக அதிகரித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96 லட்சத்து 77 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 573ஆக உயர்ந்துள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் (காலை 8 மணி நிலவரப்படி) 391 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை 91 லட்சத்து 39 ஆயிரத்து 901 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 94.45 விழுக்காடாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.45 விழுக்காடாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் மூன்று லட்சத்து 96 ஆயிரத்து 729 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதன்படி, புதிய பாதிப்பு விகிதம் 4.1 விழுக்காடாக இருக்கிறது.
ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் டிசம்பர் 6ஆம் தேதி வரை 14 கோடியே 77 லட்சத்து 87 ஆயிரத்து 656 கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. புதிதாக உயிரிழந்தவர்களின் விவரம் கீழ்வருமாறு:

மாநிலம்உயிரிழந்தோர் எண்ணிக்கை
டெல்லி69 பேர்
மேற்கு வங்கம்46 பேர்
மகாராஷ்டிரா40 பேர்
கேரளா28 பேர்

ஹரியானா

உத்தரப் பிரதேசம்

24 பேர்
பஞ்சாப்20 பேர்
தமிழ்நாடு16 பேர்

இதில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் கரோனாவுடன், துணைநோய்களால் ஏற்பட்ட பாதிப்பால் நேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Dec 7, 2020, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.