ETV Bharat / bharat

கோவிட்டால் அனாதையான குழந்தைகள்- பணம் பிரிக்கும் தொண்டு நிறுவனங்கள்- உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

கரோனா வைரஸால் பெற்றோரை இழந்த குழந்தைகள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

illegal adoptions  Act against NGOs  illegal adoptions of children orphaned by COVID  children orphaned by COVID  SC to States  Supreme Court  Supreme Court on law against illegal adoptions  act against illegal adoptions  law against illegal adoptions  சிறார் நீதிச்சட்டம்  கோவிட்  உச்ச நீதிமன்றம்  பணம் பிரிக்கும் தொண்டு நிறுவனங்கள்  தொண்டு நிறுவனங்கள்

author img

By

Published : Jun 8, 2021, 9:42 PM IST

டெல்லி: கோவிட் -19 ஆல் அனாதையான குழந்தைகளின் பெயர்களில் எந்தவொரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் நிதி சேகரிப்பதைத் தடுக்குமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) உத்தரவிட்டது.

அப்போது, குழந்தைகளின் அடையாளத்தை வெளிப்படுத்தி, ஆர்வமுள்ளவர்களை தத்தெடுக்க அழைக்கிறது. இந்தத் சட்டவிரோத தத்தெடுப்புகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும், சிறார் நீதிச்சட்டம் (Juvenile Justice) 2015 இன் விதிகளுக்கு மாறாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கக்கூடாது" என்று உத்தரவிட்டது.

தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் COVID-19 ஆல் அனாதையான குழந்தைகளை சட்டவிரோதமாக தத்தெடுப்பது தொடர்பான புகார்கள் வெளியாகின. இது தொடர்பான குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) புள்ளிவிவரங்களின்படி 3,621 குழந்தைகள் அனாதைகளாகவும், 26,176 குழந்தைகள் பெற்றோரை இழந்ததாகவும், 2721 குழந்தைகள் ஏப்ரல் 1, 2021 முதல் 2021 ஜூன் 5 வரை கைவிடப்பட்டதாகவும் காட்டுகின்றன.

இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நிதியுதவி எந்தத் தாமதமும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கோவிட் -19 காரணமாக அல்லது வேறு காரணங்களால் 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு அனாதைகளாக அல்லது பெற்றோரை இழந்த குழந்தைகளை தொடர்ந்து அடையாளம் காணவும், பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் இணையதளத்தில் தரவை வழங்கவும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பெஞ்ச் தனது உத்தரவில் மேலும் அறிவுறுத்தியது.

இதையடுத்து, நீதிமன்றம் தனது உத்தரவில், சிறார் நீதிச்சட்டம், 2015 மற்றும் இந்திய யூனியன் மற்றும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு பரவலான விளம்பரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கங்களை கேட்டுக் கொண்டது. இந்த வழக்கு வருகிற 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: அமராவதி பெண் எம்பி சாதி சான்றிதழ் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.