மகாராஷ்டிரா: குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, மனைவி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகளுக்குப் பதிலாக 5 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்கி மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பணம் விவகாரம் தொடர்பாக தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் பிரிஜேஷ்குமார் பிரசாத், தனது மனைவியைக் கொலை செய்துவிட்டார்.
இவர்களுக்கு இரண்டு சிறுவயது மகள்கள் உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தைக்கருத்தில் கொண்டு இத்தகைய தீர்ப்பை மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும், தற்காப்புக்காக கணவன், மனைவியை தாக்கியபோது, அவரது மனைவி எதிர்பாராதவிதமாக இறந்ததாகவும், அவர் கொலை செய்யவில்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கும்போது இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, குற்றம்சாட்டப்பட்டவருக்கு குறுகிய கால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பிரிஜேஷ்குமார் பிரசாத் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது;
அவரது செயல் ஆபத்தானது என்றாலும், அது முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை, அதன் மூலம் அவரது தண்டனை குறைக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அந்த நபருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: சிறையில் சாத் பூஜை செய்யும் முஸ்லீம் பெண் கைதிகள்