ETV Bharat / bharat

கனமழையால் இடிந்து விழுந்த சுவர்; உயிர் தப்பிய 3 பெண்கள்! - சேதத்தின் மதிப்பு

புதுச்சேரி: அரும்பர்த்தபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், நல்வாய்ப்பாக மூன்று பெண்கள் உயிர்தப்பினர்.

Accident of falling wall of house due to heavy rain; 3 girls who survived!

author img

By

Published : Dec 11, 2020, 1:25 AM IST

புதுச்சேரி உழவர்கரை சட்டப்பேரவைத் தொகுதி அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா. கணவரை இழந்த இவர், தனது தாய் மற்றும் மகளுடன் வசித்துவருகிறார். புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இந்த தொடர் மழையின் காரணமாக இவர்கள் வசித்துவரும் வீட்டின் சுவர் ஈரப்பதத்தால் பாதிப்படைந்தது.

இந்நிலையில்,புதன்கிழமை நள்ளிரவு இவர்கள் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதி மேல் கூரை ஒடுகள் திடீரென இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டவுடன் வீட்டில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டு சுவரும் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் வீட்டின் முன்பகுதியில் அமைந்திருந்த மளிகை கடையும் முற்றிலும் சேதமடைந்தது.

சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. சேதத்தின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் நல்வாய்ப்பாக வீட்டினுள் இருந்த மூன்று பேரும் உயிர் தப்பினர்.

இதையும் படிங்க:மணக்கோலம் காணும் புது மாப்பிள்ளைக்கு 5 டிப்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.