ETV Bharat / bharat

டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த திருநங்கை போபி கின்னர் மாநகராட்சி தேர்தலில் சுல்தான்புரி-ஏ வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.

டெல்லி அரசியலில் நுழைந்த முதல் திருநங்கை

author img

By

Published : Dec 7, 2022, 10:59 PM IST

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் சுல்தான்புரி-ஏ வார்டில் ஆம் ஆத்மி கட்சியின் கட்சியின் சார்பாக போட்டியிட்ட திருநங்கை வேட்பாளர் போபி கின்னர் வெற்றி பெற்றார்.

போபி காங்கிரஸ் வேட்பாளரான வருணா டாக்காவை 6,714 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து டெல்லி அரசியலில் நுழைந்த முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வெற்றிக்கு பின்னர் போபி ”எனக்காக கடுமையாக உழைத்த மக்களுக்கு எனது வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி எனது பகுதியில் வளர்ச்சிக்காக உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சமூக ஆர்வலராக இருந்த இவர், கடந்த 2017ஆம் ஆண்டு, போபி டெல்லி மாநகராட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. பின்னர் அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். பாபி, 'இந்து யுவ சமாஜ் ஏக்தா அவாம் பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டி'யின் டெல்லி பிரிவின் தலைவராகவும் உள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாஜகவின் தலையெழுத்து... காங்கிரஸின் கடைசி வாய்ப்பு... வெல்லப்போவது யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.