ETV Bharat / bharat

பஞ்சாப் தேர்தல்: ஆம்ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் யார்? அறிவிப்பு விரைவில்... - AAP CM candidate

பஞ்சாப் மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில ஆம்ஆத்மி முதலமைச்சர் வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் தேர்தல்
பஞ்சாப் தேர்தல்
author img

By

Published : Aug 2, 2021, 10:18 AM IST

பஞ்சாப் மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில ஆம்ஆத்மி முதலமைச்சர் வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் பகவந்த் மான் தெரிவித்தார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து டெல்லி முதலமைச்சரும் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து பகவந்த் மான் கூறுகையில், "கட்சியின் தேசிய அமைப்பாளருடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இதில் அனைத்து எம்பிக்களும், எம்எல்ஏக்களும் கலந்துகொண்டனர். பஞ்சாப் தேர்தல் குறித்த புளுபிரின்ட் மீது நாங்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டோம்.

எங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் காரணிகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்த முயற்சித்தோம்.

முன்பு பஞ்சாபில் ஆட்சியில் இருந்த இரண்டு அரசுகளும் என்ன செய்தன என்று நாம் அனைவரும் அறிவோம். அவர்களைப் போல் அல்லாமல், மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பதிலேயே எங்கள் கவனம் உள்ளது.

அடுத்து வரும் நாள்களில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். எங்கள் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் அறிவிப்போம்" என்றார். கடந்த ஜூனில் பஞ்சாப் வந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில ஆம்ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என அறிவித்தார்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆம்ஆத்மி 20 தொகுதிகளைக் கைப்பற்றி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

இதையும் படிங்க: அஸ்ஸாமில் தேங்கியுள்ள மருத்துவப் பொருள்கள்: கிடைக்காமல் மிசோரம் மக்கள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.