ETV Bharat / bharat

புஷ்பா ஸ்டைலில் கணவனின் கழுத்தை அறுத்த மனைவி- தெலுங்கனாவில் அதிர்ச்சி சம்பவம் - Telangana state

தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் அண்மையில் திருமணம் செய்த தம்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவனின் கழுத்தை மனைவி அறுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

புஷ்பா ஸ்டைலில் கணவனின் கழுத்தை அறுத்த மனைவி- தெலுங்கனாவில் அதிர்ச்சி சம்பவம்

author img

By

Published : Apr 26, 2022, 12:36 PM IST

ஹனம்கொண்டா(தெலுங்கானா): தெலுங்கானா மாநிலம் ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள பசரகொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு, இவருக்கும் அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அர்ச்சனா அவரது கணவரின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை இரவு குடும்பத்தின் உறுப்பினர்கள் வெளி அறையிலும், கணவன் - மனைவி உள் அறையிலும் உறங்கி கொண்டிருந்த வேளையில், அர்ச்சனா திடீரென ராஜூவின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த ராஜூ கூச்சல் போட்டுள்ளார். அலறலை கேட்டு உறவினர்கள் அவரை காப்பாற்றினர்.

மேலும், அர்ச்சனா திடீரென ஆக்ரோஷமாகவும், மனதளவில் பாதிக்கப்பட்ட நபர் போல் நடந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ராஜூவை மீட்டு வாராங்கல் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராஜூவின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புகார் இல்லை: சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜீன் திரைப்படத்தில் வில்லனின் மனைவி வில்லனின் கழுத்தை பிளேடு கொண்டு அறுக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த படத்தைப் போல நிகழ்வு நடந்திருப்பதாக சுற்றுவட்டாரத்தினர் கூறி வருகின்றனர். மேலும் ராஜூ - அர்ச்சனாவிற்கு திருமணம் முடிந்து 1 மாதமே ஆன நிலையில் இவ்வாறு நடந்திருப்பது உறவினர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் வீட்டார் தரப்பிலிருந்து புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் ராஜூவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவையில் மருத்துவ மாணவி தற்கொலை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.