ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வனபர்த்தி நகரைச் சேர்ந்த பாலசாமி(39) என்பவருக்கும், லாவண்யா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான பாலசாமியின் நண்பர் நவீன், கரோனா ஊரடங்கின்போது பாலசாமி வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார்.
இதில், நவீனுக்கும் லாவண்யாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பாலசாமி தனது நிலத்தை விற்பனை செய்துள்ளார். அதில் 20 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இந்த பணத்தை பார்த்த லாவண்யா, கணவரை கொலை செய்துவிட்டு, பணத்தை எடுத்துச் சென்று காதலனுடன் உல்லாசமாக இருக்க திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக காதலன் நவீனுடன் பேசி சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி கோயிலுக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் என லாவண்யா கூறியதையடுத்து, கணவன்- மனைவி இருவரும் கோயிலுக்கு சென்றுள்ளனர். லாவண்யாவின் திட்டப்படி அடியாட்களுடன் கோயிலுக்கு வந்த நவீன், பாலசாமியை கடத்திச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரது செல்போனையும் தூக்கி வீசியுள்ளனர். கணவரை தீர்த்து கட்டியதற்காக நவீனுக்கு 60 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார் லாவண்யா. இதைத் தொடர்ந்து ஜனவரி 21ஆம் தேதி பாலசாமியை காணவில்லை என அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த லாவண்யா உடனடியாக மாயமாகியுள்ளார்.
சந்தேகமடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாலசாமியின் செல்போன் சிக்னலை கண்டுபிடித்து, பின்னர் அவரது உடலையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து கணவரை காதலனை வைத்து தீர்த்துக் கட்டிய மனைவி லாவண்யாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த காதலன் நவீன், குருமூர்த்தி, கணேஷ், பங்கரி ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய ஜவுளிக்கடை உரிமையாளர் சிறையில் அடைப்பு