ETV Bharat / bharat

இந்திய ஜனநாயகத்தின் இதயம் - 75ஆண்டு கடந்து வந்து பழைய நாடாளுமன்றம் குறித்து பிரதமர் உரை! - ETV Bharat Tamilnadu

75 years of Indian Parliament: நேரு கூறியது போல் இந்திய ஜனநாயகம் தனது புதிய பயணத்தை இன்று இரவு முதல் தொடங்க உள்ளது. அரசுகள் வரும், போகும், கட்சிகள் உருவாகும், அழியும், ஆனால் நாடு முன்னேற வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியுள்ளார். இந்திய அரசியலில் இரண்டு பிரதமர்களால் பேசப்பட்ட இந்த ஆழமான வார்த்தைகள் புதிய தொடக்கத்தின் போது ஜனநாயகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அனைவருக்கும் நினைவூட்டுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

a-tribute-to-the-heart-of-democracy-prime-minister-narendra-modis-words-reflected-75-years-of-indian-parliament
இந்திய ஜனநாயகத்தின் இதயம் - 75ஆண்டு கடந்து வந்து பழைய பாராளுமன்றம் குறித்து பிரதமர் உரை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 5:24 PM IST

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று (செப். 18) கூடியது. 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு கூட்டத் தொடரின் முதல் நாளில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறும் போது, "நேரு கூறியது போல் இந்திய ஜனநாயகம் தனது புதிய பயணத்தை இன்று இரவு முதல் தொடங்க உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், அரசுகள் வரும், போகும், கட்சிகள் உருவாகும், அழியும், ஆனால் நாடு முன்னேற வேண்டும் என தெரிவித்து இருந்தார். நம் ஒவ்வொரு வரும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையில் பின்னப்பட்டு இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. இந்திய அரசியலில் இரண்டு பிரதமர்களால் பேசப்பட்ட இந்த ஆழமான வார்த்தைகள் புதிய தொடக்கத்தின் போது ஜனநாயகத்தின் உணர்வை அனைவருக்கும் நினைவூட்டுகிறேன் என கூறினார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டடம் தாக்குப்பட்டது குறித்து பேசிய பிரதமர் நமது ஜனநாயகத்தை காப்பாற்ற பலர் குண்டுகளை தனது நெஞ்சில் தாங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எண்ணற்ற தனி மனிதர்கள் இந்த ஜனநாயகத்தை காப்பாற்ற அசைக்க முடியாத அர்பணிப்பை அளித்து கதாநாயகர்களாக உள்ளனர்.

இதையும் படிங்க: "பன்முகத்தை கொண்டாடும் ஒவ்வொரு நேரத்திலும் நாடாளுமன்றம் தலை நிமிர்ந்து நிற்கிறது" - பிரதமர் மோடி!

நாட்டின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை அளித்த அனைத்து மக்களுக்கும் தலைவணங்குகிறேன். ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அனைவரின் கூட்டு முயற்சி, ஒவ்வொரு தனி நபரும் தனது தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்திய மக்களின் வெளிப்பாடாக நாடாளுமன்றம் மாறி உள்ளன. பல ஆண்டுகளாக தேசத்தின் அடையாளமாக மக்களிடம் உருவாகியுள்ளன. இந்தியாவின் அனைத்து இடங்களில் இருந்து பிரதிநிதிகளை கண்டறித்து அவர் நிலையை கேட்கும் இடமாக உள்ளன.

இந்திய நாட்டின் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள தொடங்கியது மிகப்பெரிய சாதனை, இந்தியாவின் ஜனநாயகம் மட்டும் இல்லாமல், தற்போது உலகம் எங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஊக்க அளிக்க தொடங்கியுள்ளோம். இந்தியாவின் நாடாளுமன்றம் கடந்த 75 ஆண்டுகளாக ஜனநாயகத்தை சரியாக அமைத்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நாடாளுமன்றம் கலங்கரை விளக்கமாக நின்று தனது சோதனை காலத்திலும், தேசத்தை வழிநடத்தியுள்ளது. நாடாளுமன்றம் பணிகள் கரோனா காலத்திலும் நாட்டிற்கான பணிகளை நிறுத்தவில்லை என்றும், உலகம் முழுவதும் கரோனா எதிர் கொண்டு இருக்கும் போது நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டுபாடுகளை கடைபிடித்து நாட்டிற்காக தங்களின் அர்ப்பணிப்பை வெளிபடுத்தினர் என தெரிவித்தார்.

பின பிரதமர் நாட்டின் சேவைக்காக தங்களை உயிர்களை அர்ப்பணித்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்திரஜித் குப்தா 43 ஆண்டு கால உறுப்பினராக பணியாற்றியவர். சந்திரமணி முர்மு 25 வயதில் இளைய உறுப்பினரானார். இவை அனைத்தும், இந்திய ஜனநாயகத்தின் பன்முகத்தன்மையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் 7500 உறுப்பினர்கள் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். தற்போது 650 உறுப்பினர்கள் உள்ளனர். தொடர்ந்து பேசிய மோடி, நான் முதன் முதலில் நாடாளுமன்ற உறுப்பினரானபோது நாடாளுமன்ற படிக்கட்டுகளில் தனது தலையை வைத்து வணங்கினேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புகள் பற்றி உணர்ந்துள்ளேன.

இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை விட்டு வெளியேறுவது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் சம்சாத் பவன் சுவர்கள் எண்ணற்ற விவாதங்கள் நாட்டின் பல முடிவுகளை வடிவமைத்த இடம் என தெரிவித்தார். உலகமே இந்தியாவை நண்பனாக எடுத்துக்கொண்டுள்ளது. அதற்கு காரணம் நமது கலாச்சாரம் மற்றும் விவேகானந்தரில் கூற்றுகள், இந்திய உலக அளவில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.

P20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதம் உள்ள பல நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற பேச்சாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்க நாம் அனைவரும் பெருமைபட வேண்டும் என தெரிவித்தார். G20 உச்சி மாநாட்டின் வெற்றி 140 கோடி மக்களின் வெற்றியாகும் இது நாட்டின் தலைவருக்கான வெற்றி இல்லை. மேலும் உலகளாவிய சவால்களை எதிரகொள்ள நாடுகள் ஒன்று இணைந்துள்ளன என தெரிவித்தார்.

இந்திய விஞ்ஞானிகளை இந்த தருணத்தில் வாழ்த்த விரும்புகிறேன். இந்தியா அறிவியல் தொழிலநுட்பத்தில் பல்வேறு சாதனைகள் மற்றும் வெற்றியினை எடுத்துக்காட்டுகின்றன என தெரிவித்தார். உலகம் முழுவதும் இந்தியாவை பற்றி பேச தொடங்கியுள்ளது. அம்ரிகல் முதல் கதிர்கள் புதிய தருணத்தை கொண்டு வந்துள்ளன. இந்தியா உலக அரங்கில் ஒரு ஒளிரும் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது என்பது நமது முன்னேற்றத்திற்கான சான்று என தெரிவித்தார்.

நாம் அனைவரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு செல்வோம். இந்த பழைய நாடாளுமன்ற மக்களை ஊக்குவிக்கும் இடமாக இருக்கும். சம்சாத் பவன் மரபு அதில் சேவை செய்தவர்கள் மனதில் நீங்க இடங்களாக இருக்கும் என தெரிவித்தார். சம்சாத் பவன் கட்டடம் நாட்டு மக்களின் வியர்வை மற்றும் இரத்தத்தை சுமந்துள்ளது.

மேலும் இந்த கட்டடம் பல போராட்டங்கள் வெற்றிகளை கண்டுள்ளது. மேலும் இந்திய ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மௌனமான சாட்சியாக இருக்கும்" என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: Parliament Special Session : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று தொடக்கம்..! முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.