ETV Bharat / bharat

ரயில்பெட்டிபோல் குண்டூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட உணவகம்! - ஃபுட் எக்ஸ்பிரஸ்

குண்டூர் ரயில் நிலையத்தில் தென் மத்திய ரயில்வேயில் முதன்முறையாக ரயில் பெட்டிபோல் அமைக்கப்பட்ட ’ஃபுட் எக்ஸ்பிரஸ்’ எனும் ஓர் ’தீம்டு’ உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

குந்தூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட ரயில் பெட்டி போல் உணவகம்...!

author img

By

Published : Oct 12, 2022, 2:01 PM IST

Updated : Oct 12, 2022, 2:34 PM IST

குண்டூர்: ஆந்திரப்பிரதேசத்தின் குண்டூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி போல் அமைக்கப்பட்டுள்ள ‘ஃபுட் எக்ஸ்பிரஸ்’ எனும் புதிய உணவகம் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த உணவகத்தை குண்டூர் பிரிவு ரயில்வே மேலாளர் மோகன் ராஜா திறந்துவைத்தார்.

தென் மத்திய ரயில்வேயில் முதன்முறையாக இப்படி ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளைத் தாண்டி, பொதுவாக இந்த உணவகத்திற்கு வரும் மக்களுக்கும் தனித்த அனுபவம் தரும் பொறுத்து, இந்த உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தைத் திறந்து வைத்த ரயில்வே மேலாளர் மோகன் ராஜா கூறுகையில், “பழுதடைந்த ஸ்லீப்பர் ரயில்கோச் பேட்டியை இந்த உணவகத்தை வடிவமைக்கப் பயன்படுத்திக்கொண்டோம். இந்தப் புத்தம்புது யோசனையின் மூலம் ரயில் பயணிகளுக்கு ஓர் புதிய அனுபவத்தைத் தர முடியும்.

இந்த உணவகத்தில் பல்வேறு வகையான உணவுகளை சுத்தமாகப் பரிமாறும்படி அமைக்கபப்ட்டுள்ளது. மேலும், உணவுகளின் விலையும் அனைவரும் வாங்கும் படியான விலையாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்” என்றார்.

ரயில்பெட்டிபோல் குண்டூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட உணவகம்!

இதையும் படிங்க: அடுத்த ஆண்டு டிசம்பரில் ராமர் கோயில் திறக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி

Last Updated : Oct 12, 2022, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.