ஆந்திர பிரதேசம் (எலூரு): மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை நீடித்து வருகிறது. நீரோடைகளுக்கு மேல் பாலங்கள் இல்லாததால் மக்கள் நடமாட சிரமப்பட்டு வருகின்றனர். சிலர் நீரோடையைக் கடக்க முயலும் போது அடித்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
எலூரு மாவட்டத்தில் அதைப் போன்றொரு சம்பவம் நடந்தேறியுள்ளது. இப்பகுதியில் இன்று காலை முதலே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த கனமழையால் சாலைகளிலுள்ள கால்வாய்களும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் கோட்டராமச்சந்திரபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் நீடித்து வருகிறது.
வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் நீரோடையைக் கடக்க அனைவரும் பயந்த நிலையில், கன்னபுராவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மட்டும் அதைக் கடக்க முயன்றுள்ளார். அந்த நீரோடையை சிறு தூரம் கடக்கும் போதே அவர் அடித்துச் செல்லும் நீரால் அடித்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அடித்து செல்லப்படும் போது சிறு தூரத்திலேயே ஓர் மரக்கிளையில் பற்றிக் கொண்டுள்ளார் வெங்கடேஷ். பின்னர், அவரை அந்தப் பகுதியினர் மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.