ETV Bharat / bharat

சீனாவில் பரவும் புதிய நோய்.. மாநில அரசுகள் தயாராக இருக்க மத்திய அரசு கடிதம்! - severe acute respiratory illness

சீனாவில் பரவி வரும் சுவாச நோயால் தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கடிதத்தையடுத்து ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் மருத்துவ கட்டமைப்பை தயார் படுத்தி வருகின்றன.

A new respiratory illness surges in China central government alerts state and union healthcare
சீனாவில் பரவும் புதிய நோய்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 5:01 PM IST

டெல்லி: சீனாவில் எச்9என்2 என்னும் இன்புளூயன்சா பரவி வருகிறது. சீனாவில் பரவி வரும் சுவாச கோளாறு குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதானால் இந்தியாவிற்கு பெரியளவில் ஆபத்து இருக்காது எனவும், கரோனாவிற்கு பிறகு எத்தகைய சுகாதார பேராபத்துக்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு உட்கட்டமைப்பு வலிப்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சீனாவில் பரவி வரும் சுவாச கோளாறுகளால் பாதிக்கப்படுவபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தங்களின் மருத்துவ உட்கட்டமைப்பை தயார்நிலையில் வைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் சுவாச நோய்களுக்கு எதிராக மிகுந்த எச்சரிக்கையுடன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த பாதிப்பு குளிர்காலம் காரணமாக அதிகம் பரவுவதாகவும், அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதற்கு பதற்றமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் மருத்துவ கட்டமைப்பை தயார்நிலையில் வைக்கும் படி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கரோனா காலத்தில் திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் பரவும் நோய் கடுமையான சுவாச நோய் (severe acute respiratory illness-SARI) என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி ராஜஸ்தான், உத்தரகாண்ட், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தங்கள் மருத்துவ கட்டமைப்பை தயார்படுத்தி வருகின்றன. கர்நாடகாவில், சுவாச நோய்களுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அம்மாநில் அரசு எச்சரித்துள்ளது. இந்த நோய் ஐந்து முதல் ஏழு நாட்கள் நீடிக்கும் எனவும், இதனால் காய்ச்சல், உடல் சோர்வு, பசியின்மை போன்றவை ஏற்படும் எனவும், அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூன்று வாரங்களுக்கு வறட்டு இருமல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில், மருத்துவ ஊழியர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். நோய்த் தொற்றுகளைத் தடுக்க கவனமுடன் பணியாற்ற வேண்டும். என ராஜஸ்தான் சுகாதாரத் துறையின் கூடுதல் செயலாளர் சுப்ரா சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநில சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் குமாரும், சுவாசக் கோளாறு பாதிப்பு குறித்து தீவிரமாக கண்காணிக்குமாறு மருத்துவத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். குஜராத் அரசும், சுவாச கோளாறு நோய் பாதிப்பிற்கு எதிராக அனைத்து மருத்துவமனைகளும் தயாராக இருக்க அறிவுறுத்தி உள்ளது.

இதேபோல், சுவாச நோய்களுக்கு எதிரான கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறும், அனைத்து மருத்துவமனைகளும் விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரும் அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: ஒரே மாதிரி கல்வி நிறுவனத்தின் பெயரை வைப்பதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் கிடுக்குபிடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.