தெலங்கானா மாநிலம் சூர்யா பேட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு ஆறு மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பாரதி கடந்த ஆறு மாதமாக தனிமையில் இருந்து வந்துள்ளார். பித்து பிடித்தது போல காணப்பட்ட பாரதிக்கு நாக தோஷம் உள்ளதாக கூறிய சாமியார் தோஷத்தை போக்க தனது ஆறு மாத குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பாரதிக்கு நரபலி மீது நம்பிக்கை இருந்துள்ள நிலையில் போலி சாமியார் கூறியபடி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூஜை அறையில் உள்ள சாமி படத்திற்கு முன்பு குழந்தையை வைத்து பூஜை செய்து பின்னர் கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் நரபலி கொடுத்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நடந்ததை பற்றி கூறியுள்ளார்.
பின்னர், அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”சில நாள்களாக பித்து பிடித்ததுபோல இருந்த பாரதி ஆறு மாதமாக போலி சாமியாரை நம்பி பூஜை செய்து வந்ததாக” தெரிவித்தனர்.இதையடுத்து பாரதியை கைது செய்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொணடு வருகின்றனர்.
இதையும் படிங்க:
குடும்பத் தகராறு: குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞருக்குத் தீவிர சிகிச்சை