ETV Bharat / bharat

வண்டி விலை ரூ.71,000... நம்பர் பிளேட் விலை ரூ.15 லட்சம்... சண்டிகரில் சம்பவம்... - இருசக்கர வாகனத்துக்கு விஜபி நம்பர் பிளேட் வாங்குவதற்காக சுமார் 15 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்

சண்டிகரைச் சேர்ந்த ஒருவர், தனது இருசக்கர வாகனத்துக்கு விஜபி நம்பர் பிளேட் வாங்குவதற்காக, சுமார் 15 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

scooty
scooty
author img

By

Published : Apr 20, 2022, 10:43 PM IST

சண்டிகர்: வாகனங்களுக்கு ஃபேன்சியாக அல்லது விஜபி நம்பர் பிளேட்டுகள் வாங்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில், அதற்காக அதிகளவு செலவு செய்யவும் மக்கள் தயாராக உள்ளனர். அப்படி ஒரு சம்பவம் சண்டிகரில் நடந்துள்ளது.

சண்டிகரைச் சேர்ந்த பிரிஜ் மோகன் (42) என்பவர், தனது இருசக்கர வாகனத்துக்கு விஜபி நம்பர் பிளேட் வாங்குவதற்காக, சுமார் 15 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளார். சண்டிகர் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏலத்தில் கலந்து கொண்ட அவர், CH01-CJ-0001 என்ற விஜபி நம்பர் பிளேட்டை 15 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

தான் வாங்கிய இந்த எண்ணை, முதலில் இருசக்கர வாகனத்துக்கும், பின்னர் காருக்கும் பயன்படுத்தப்போவதாக பிரிஜ் மோகன் தெரிவித்தார். இவர் தனது இருசக்கர வாகனத்துக்காக பல லட்சம் கொடுத்த நம்பர் பிளேட் வாங்கியுள்ளார், ஆனால் அந்த இருசக்கர வாகனத்தின் விலை வெறும் 71 ஆயிரம் ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கர்நாடக அரசுப் பள்ளிகளில் பகவத் கீதை- அமைச்சர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.