ETV Bharat / bharat

விநாயகர் சதுர்த்தி - ஹைதராபாத் ஏலத்தில் ஒரு லட்டு சுமார் ரூ.70 லட்சத்துக்கு விற்பனை!

ஹைதராபாத் கணேஷ் சதுர்த்தி லட்டு ஏலத்தில் ஒரு லட்டு சுமார் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.

ஹைதராபாத்
ஹைதராபாத்
author img

By

Published : Sep 12, 2022, 3:01 PM IST

Updated : Sep 12, 2022, 4:02 PM IST

ஹைதராபாத்: விநாயகர் சதுர்த்தி தருணங்களில் 'கணேஷ் சதுர்த்தி லட்டு ஏலம்' என்று வரும்போது, ​​ஹைதராபாத்தில் உள்ள பாலாபூர் லட்டு பற்றித்தான் அனைவரும் அதிகம் பேசுவார்கள். ஏனெனில் பாலாபூர் லட்டு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஏலத்தில் தனது சாதனையை தானே முறியடித்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

ஆனால், இம்முறை பாலாபூர் லட்டு விலையைவிட, மற்றொரு லட்டின் விலை உயர்ந்து விற்பனையாகியிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவ்விலையானது, பாலாபூர் லட்டின் விலையை மும்மடங்காக உயர்ந்துள்ளது.

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ஹைதராபாத்தின் - ராஜேந்திர நகர் பந்தலகுடா எல்லையில் உள்ள ரிச்மண்ட் வில்லா காலனியில் உள்ள லட்டு ஒன்றின் ஏலமானது மாநிலத்தில் புதிய சாதனையினைப் படைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை(செப்.11) நடைபெற்ற லட்டு ஏலத்தில், ஒரு லட்டின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ. 69,80,000 லட்சத்திற்கு ஏலம் போனது அனைவரையும் திகைப்படையச் செய்தது.

இவ்வளவு பெரிய தொகையை செலவழித்து டாக்டர் சாஜி டிசோசா குழுவினர் லட்டுவைப் பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் டாக்டர் சஜி கூறுகையில், 'லட்டு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். லட்டு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் கோயில் நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். லட்டு ஏலத்தில் கிடைக்கும் பணம் ஆர்.வி.தியா அறக்கட்டளை மூலம் ஏழை மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும்' எனத் தெரிவித்தார்.

இதற்கு முன் வெள்ளிக்கிழமை(செப்.9) நடைபெற்ற ஏலத்தில் பாலாபூர் லட்டு ரூ.24 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதே அதிகமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமைச்சர் காலில் விழுந்து கதறிய திமுக பேரூராட்சி கவுன்சிலர் குடும்பத்தினரால் பரபரப்பு!

Last Updated : Sep 12, 2022, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.