புனே (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிப்ரி சின்ச்வாட் நகரின் பிம்பிள் குராவ் பகுதியில் வாஷிங் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த வாஷிங் சென்டரில் காரை தூய்மைப்படுத்துவதற்காக, யுவன் என்ற ஐந்து வயது சிறுவன் தனது தாயாருடன் வந்துள்ளார். வாஷிங் சென்டரை ஒட்டியுள்ள கீதா பேப்ரிகேஷன் கடையில் சிறுவனின் தாய் அமர்ந்திருந்தார்.
அங்கு தாயின் அருகில்தான் சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்தார். இதற்கிடையில், அருகில் இருந்த அதிக எடை கொண்ட இரும்புக்கம்பியில் சிறுவன் தொங்க முயன்றுள்ளார். அப்போது அந்த கம்பி, சிறுவன் மீது எதிர்பாராத விதமாக விழுந்துள்ளது. உடனடியாக சிறுவனின் தாயார், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், பேப்ரிகேஷன் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மூத்த காவல் ஆய்வாளர் சுனில் டோன்பே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காதலிக்கு கத்தி குத்து - கொடூர காதலன் கைது