ETV Bharat / bharat

வைத்தியம் பார்க்க வந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவர் கைது - tamil latest news

உத்தரகாண்ட் மாநிலத்தில் வைத்தியம் பார்க்க வந்த கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வைத்தியம் பார்க்க வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை; மருத்துவர் கைது

author img

By

Published : Dec 12, 2022, 10:58 PM IST

ருத்ராபூர்: உத்தரகாண்ட் மாநிலம் பந்த்நகர் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், மருத்துவப் பரிசோதனைக்கு சென்றபோது டாக்டர் துர்கேஷ் குமார் என்பவர், பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி கடந்த டிசம்பர் 5ஆம் தேதி காவல்துறையினருடன் புகார் அளித்தார். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான மருத்துவரை 5 தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர்.

இந்தச் சூழலில், இன்று பந்த்நகர் வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள், ஒரு வாரமாகியும் குற்றவாளி கைது செய்யப்படாததைக் கண்டித்து மருத்துவமனை வாயிலில் அதிகாலை முதல் 7 மணி நேரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் மருத்துவமனை சார்பில் பலதரப்பட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட போதிலும், அவை அனைத்தும் தோல்வியிலேயெ முடிந்தது.

இந்நிலையில் மாலை 4 மணி அளவில் காவல்துறையினர் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவரை தண்டா பகுதி அருகே வைத்து கைது செய்தனர். இந்த செய்தி மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்ட பிறகே மாணவர்கள் அந்த பகுதியை விட்டு கலைந்து சென்றனர். மேலும் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி.. ரூ.2 லட்சம் கொடுத்து மறைக்க முயற்சித்த பஞ்சாயத்து..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.