பள்ளி மாணவியை கூட்டுப்பாலியல் செய்த சக மாணவர்கள்! - hyderabad school girl rape case
ஹைதராபாத் அருகே பத்தாம் வகுப்பு மாணவி, அதே வகுப்பில் படித்த சக மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது.

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம், பத்தாம் வகுப்பு மாணவியை அவருடன் படித்த சக மாணவர்கள் 5 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். சம்பவம் நடந்த பத்து நாட்கள் கழித்து, வீடியோவை வைத்து மிரட்டி, மாணவியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து மாணவி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு இதுகுறித்து தெரியவந்தது. இதை அறிந்த மாணவர்கள், பெற்றோரையும் அச்சுறுத்தும் வகையில், மாணவியின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐந்து மாணவர்களையும் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினர்.
இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை : பா.ஜ.க. வேட்பாளருக்கு போலீசார் வலைவீச்சு..!