ETV Bharat / bharat

சென்னை நிறுவன கண் மருந்தால் அமெரிக்காவில் உயிரிழப்பு - மருந்து நிறுவனத்திற்கு தடை! - Chennai Today News

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட சொட்டு மருந்தை பயன்படுத்திய நபர் அமெரிக்காவில் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் செங்கப்பட்டு திருப்போருரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டுக் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

கண் மருந்து
கண் மருந்து
author img

By

Published : Feb 4, 2023, 1:40 PM IST

செங்கல்பட்டு: திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்தால், அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்ததாகவும், பலருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்ததை அடுத்து, மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனியார் மருந்து உற்பத்தி ஆலையில் ஆய்வு செய்தனர்.

சென்னை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் குளோபல் ஹெல்த் கேர் ஃபார்மசூடிகல் மருந்து நிறுவனத்தின் மருந்து உற்பத்தி பிரிவு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் உள்ளது. தனியார் மருந்து உற்பத்தி ஆலையில் கண் சொட்டு மருந்து தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்து ஆர்டிபிசியல் டியர்ஸ் என்ற பெயரில் இரண்டு அமெரிக்க நாட்டு நிறுவனங்களால் அமெரிக்கா முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்த மருந்தை பயன்படுத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளானதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், இந்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியவர்களுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா உடலில் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதற்கு முன்னதாக இந்த வகை பாக்டீரியாக்கள் அமெரிக்காவில் காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தனியார் கண் சொட்டு மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிக்கையை அடுத்து மத்திய மற்றும் மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுக் குழுவினர் நள்ளிரவு 2 மணி அளவில் ஆலத்தூரில் உள்ள குளோபல் நிறுவனத்தின் உற்பத்தியாலையில் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், சொட்டு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரசாயன உள்ளீடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் மருத்து குழுவினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பேனா வேணா.. கடல் அன்னை வடிவில் பாஜக போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.