பராபன்கி : உத்தர பிரதேசத்தில் 28 ஆண்டுகளுக்கு முன் எருமை மாட்டை கொன்றதாக கூறப்படும் வழக்கில் 83 வயது முதியவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் பரபங்கி பகுதியைச் சேர்ந்தவர் அச்சான். உத்தர பிரதேச போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி உள்ளார். கடந்த 1995 ஆம் ஆண்டு அரசு பேருந்தில், போக்குவரத்து கழகத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு சென்ற போது, அச்சான் ஓட்டிய பேருந்து மாட்டு வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் வண்டியில் பூட்டப்பட்டு இருந்த எருமை மாடு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் அறிவுறுத்தியதை அடுத்து அச்சான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற்ற அச்சான், அதன் பின் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவே இல்லை எனக் கூறப்படுகிறது.
ஏறத்தாழ 28 ஆண்டுகள் இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணைக்கு அச்சான் ஆஜராகாத காரணத்திற்காக நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஜூன் 21ஆம் தேதி பிடிவாரண்ட் குறித்து அச்சான் காணச் சென்ற போலீசாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்து உள்ளது.
80 வயதான அச்சான் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்து உள்ளார். வந்த காரணத்தை போலீசார் தெரிவித்த நிலையில், அச்சான் கண்ணீர் விட்டு அழுததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அச்சானின் நிலை குறித்து அறிந்து மனமுடைந்த காவல் துறையினர் அடுத்த விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்துயதாக கூறப்படுகிறது.
ஜூன் 17ஆம் தேதி வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை நடைபெற உள்ள நிலையில், நீதிமன்றத்தில் அச்சான் ஆஜராகுமாறு அறிவுறுத்தியதாக போலீசார் கூறினர். எருமை மாடு மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு 80 வயது முதியவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : பெங்களூருவில் இரண்டாம் கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்... எப்ப தெரியுமா?