உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடத்திவருகிறது. இந்த அமைச்சரவையில் உபேந்திரா திவாரி விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
இவரிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "நாட்டில் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோல் தேவைப்படுவதே இல்லை. மிக்குறைவானவர்களே நான்கு சக்ரவாகனம் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்குத்தான் பெட்ரோல் தேவை.
நூறு தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு இலவசமாகத் தந்துள்ளோம், மக்களுக்கு இலவசமாக கரோனா சிகிச்சை தருகிறோம், இலவச மருந்து தருகிறோம். இப்படி இருக்க விலைவாசி அதிகமாக ஒன்றும்" எனக் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த பேச்சு பொறுப்பற்ற முறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 100 கோடி தடுப்பூசி.. அச்சத்திற்கு மத்தியில் அரிய சாதனை- பிரதமர் நரேந்திர மோடி!