ஆந்திரப் பிரதேசம்: விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கோரா சாலையில் கோர விபத்து நடந்துள்ளது. காட் சாலையின் ஒரு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் அனைவரும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனந்தகிரி மண்டல தமுக்கில் ஐந்தாவது திருப்பத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு காவல் துறையினர், 108 அவசர ஊர்திகள், தீயணைப்புப் படை வீரர்கள் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: மணல் சுரங்கங்களுக்கு அனுமதி வழங்க புதிய கட்டுப்பாடுகள்!