ETV Bharat / bharat

பிரபல மலையாள சீரியல் நடிகை மாரடைப்பால் மரணம்; 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேர்ந்த சோகம்! - திரையுலகினர் இரங்கல்

Television serial fame priya passed away due to cardiac arrest: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகையும் டாக்டருமான பிரியா, திடீர் மாரடைப்பால் உயிரிழந்தது மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எட்டு மாத கர்ப்பிணியான பிரியாவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எட்டு மாத கர்ப்பிணியான சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் உயிரிழப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 6:57 PM IST

திருவனந்தபுரம்: மலையாள முன்னணி சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் இன்று (நவ.1) காலமானார். திருவனந்தபுரம் மாவட்டம் பூஜாபுரத்தைச் சேர்ந்தவர் பிரியா(35). மலையாள சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா. இவர் சீரியல் கடந்து சில மலையாள படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு பிரேக் கொடுத்தார் நடிகை பிரியா.

திருமணாமாகி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த நடிகை பிரியா இன்று (நவ.01) திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி சீரியல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பிரியா வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக இன்று (நவ.1) மருத்துவமனை சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போது, நடிகை பிரியா உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

நடிகை பிரியா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது எட்டு மாத குழந்தைக்கு திவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை பிரியாவின் குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் குழந்தை நலமுடன் வீடு திரும்பப் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது நடிகை பிரியாவின் இறப்பு அடுத்தடுத்து மலையாள ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக நடிகர்கள், ரசிகர்கள் எனப் பலரும் நடிகை பிரியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தோல்வி பயத்தால் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை பாஜக அரசு ஒட்டுக்கேட்கிறது: மு.க.ஸ்டாலின் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.