ETV Bharat / bharat

8 மணி நேர பணி: போராடி உயிர் நீத்தாருக்கு அஞ்சலி - புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி-கடலூர் சாலையிலுள்ள தியாகிகள் நினைவிடத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

போராடி உயிர் நீத்தாருக்கு அஞ்சலி
போராடி உயிர் நீத்தாருக்கு அஞ்சலி
author img

By

Published : Jul 30, 2021, 6:34 PM IST

ஆசிய கண்டத்தில் முதன்முறையாக எட்டு மணிநேர வேலை கேட்டு போராடிய புதுச்சேரியைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளர்கள் மீது, 1936ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி பிரெஞ்சு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அதில் 12 பஞ்சாலை தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து தொழிலாளர்கள், ஊழியர்களுக்கான பணி எட்டு மணிநேரம் என நிர்ணையிக்கப்பட்டது.

இந்த எட்டு மணிநேர வேலை என்பது பல்வேறு நாடுகளில் சட்டமானது.

அவர்களின் தியாகத்தை நினைவுகூரும்விதமாக ஆண்டுதோறும், ஜூலை 30ஆம் தேதியன்று தியாகிகள் நாளாக அனைத்துக் கட்சி தொழிற்சங்கத்தினர் கடைப்பிடித்துவருகின்றனர்.

அதன்படி புதுச்சேரியில் ஜூலை 30 தியாகிகள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

போராடி உயிர் நீத்தாருக்கு அஞ்சலி
போராடி உயிர் நீத்தாருக்கு அஞ்சலி

இதையொட்டி புதுச்சேரி-கடலூர் சாலையிலுள்ள தியாகிகள் நினைவிடத்தில் புதுச்சேரி இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் தொழிலாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.