இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கரோனா மூன்றாம் அலை தீவிரமடைந்துவருகிறது. அனைத்து மாநிலங்களிலும் தினசரி பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
குறிப்பாக, தலைநகர் டெல்லியில் தினசரி பாதிப்பு சுமார் 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மட்டும் 28,867 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,424 ஆகும்.
டெல்லி கரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திரா ஜெயின் கூறுகையில், "டெல்லியில் கோவிட் பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் சேரும் எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது. இது நம்பிக்கை அளிக்கும் அம்சமாகும்.
எனவே, புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் எண்ணம் ஏதும் டெல்லி அரசுக்கு இல்லை. மாநிலத்தில் கரோனா காரணமாக உயிரிழந்தவர்களில் 75 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே. மேலும், உயிரிழந்தவர்களில் 90 விழுக்காட்டினர் இணை நோய் உள்ளவர்கள்" என்றார்.
இதையும் படிங்க: Nun rape case: பாலியல் வழக்கில் பிஷப் பிராங்க்கோ விடுவிப்பு