ETV Bharat / bharat

ஆறாம் கட்ட வாக்குப்பதிவு: 43 தொகுதிகளில் பாஜக - திரிணாமுல் இடையே கடும் போட்டி! - ஆறாம் கட்ட வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மாநிலத்தின் வடக்கிலுள்ள ஒரு மாவட்டம், தெற்கிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு உட்பட்ட 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

6th phase Bengal polls: It's Trinamool vs BJP, also a litmus test for Left alliance to remain relevant
ஆறாம் கட்ட வாக்குப்பதிவு: 43 தொகுதிகளில் பாஜக- திரிணாமுல் இடையே கடும் போட்டி!
author img

By

Published : Apr 22, 2021, 11:39 AM IST

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மாநிலத்தின் வடக்கிலுள்ள ஒரு மாவட்டம், தெற்கிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு உட்பட்ட 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த 43 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும் எனக்கூறப்படுகிறது.இந்த 43 தொகுதிகளிலும் தங்களது வலிமையை அதிகரிக்க 2016 முதல் 2019வரையிலான கால கட்டத்தில் பாஜக கடும் முயற்சிகளை எடுத்தது. அதன்விளைவாக, 2019 தேர்தலில் இத்தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் துடைத்தெறியப்பட்டனர். நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது உருவாகியுள்ள போட்டி சுவாரசியமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பாஜக-திரிணாமுல் கடும் போட்டி

2019ஆம் ஆண்டு இந்த தொகுதிகளில் கவனிக்கத்தக்க செயல்களைச் செய்த பாஜக, இந்தத்தேர்தலில் தங்களது செயல்பாடுகளை முடுக்கிவிட்டது. அதேநேரம், வலதுசாரி முகாம்களிடம் இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் கடும் பணிகளைச் செய்துள்ளது.

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த 43 தொகுதிகளில் 32 தொகுதிகளை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், ஏழு தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும், நான்கு தொகுதிகளை இடது முன்னணிக் கூட்டணியும் கைப்பற்றின. ஆனால், இந்தக் காட்சி 2019 மக்களவைத் தேர்தலில் முழுவதுமாக மாறியது.

கடந்த தேர்தல்களில் கட்சிகளின் வாக்கு விழுக்காடு

2016ஆம் ஆண்டு 7.54 விழுக்காடு வாக்கைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 2019 மக்களவைத் தேர்தலில் 3.79 விழுக்காட்டு வாக்கை மட்டுமே பெற்றது. 2016 தேர்தலில் 10.22 விழுக்காடு வாக்கு பெற்ற பாஜக 2019ஆம் தேர்தலில் தனது வாக்கு விழுக்காட்டை 40.85ஆக உயர்த்தியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு விழுக்காடு 2016ல் 45.17 ஆக இருந்து 2019 தேர்தலில் 43.46 விழுக்காடாக குறைந்தது.

இதைவைத்து பார்க்கும்போது இத்தொகுதிகளில் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும்போட்டி நிலவும் என்பதை யூகிக்கமுடிகிறது. வடக்கு 24 பார்க்கன மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் பட்டியலின மக்களின் வாக்கு வெற்றிபெறுபவர்களைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. அனைத்துக் கட்சிகளும் அவர்களது வாக்குகளை வாங்க தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டின. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் எனலாம்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிமுறைகள் வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிச்சை எடுங்கள் - ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் கடுப்பான நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.