குவாலியர்(மத்தியப் பிரதேசம்) : மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மோரெனா மாவட்டத்தில் முரண்பாடான காதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 67 வயதான 'ராம்காளி' என்ற பெண்மணி 28 வயது இளைஞரான 'போலு'வை, காதலித்தது மட்டுமின்றி ஒன்றாக குடும்பம் நடத்திவந்துள்ளார்.
இந்த விவகாரம் இரண்டு வீட்டாருக்கும் தெரியவர, இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் வருங்காலத்தில் தங்கள் காதலுக்குப் பிரச்னை ஏற்படாமல் இருக்க ரூ.100 பத்திரத்துடன் உறுதிமொழி ஆணையரை பார்த்து, தாங்கள் இருவரும் உறவில் இருப்பதாகப் பத்திரம் ஒன்றை தயார் செய்துள்ளனர்.
உறுதிமொழி பத்திரம் : இந்தப் பத்திரத்துடன் இருவரும் குவாலியர் நீதிமன்றம் சென்று, “தங்களுக்கு திருமணத்தில் விருப்பமில்லை, ஆனாலும் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்திவருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும், ‘எங்களுக்கு தற்போதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை, இனியும் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக எங்களுக்கு அங்கீகாரம் வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு சட்ட ரீதியாக சாத்தியம் இல்லை என்கிறார் வழக்குரைஞர் அவஸ்தி. இது குறித்து அவர் கூறுகையில், “உறுதிமொழி ஆணையரைப் பார்த்து இருவரும் உறவில் இருப்பதாக பத்திரம் பெற்றுள்ளனர். எனினும், இதுபோன்ற ஆவணங்கள் இந்த விவகாரத்தில் சட்டப்படி செல்லாது” என்றார்.
90'S கிட்ஸின் காதல் : காதலித்த பெண்ணை கரம்பிடிக்க மறுத்து வேறொரு பெண்ணை நாடும் ஆண்கள் மத்தியில் காதலித்த பெண்ணின் அன்பை பெற நீதிமன்றத்தை நாடியுள்ள 90'S கிட்ஸின் காதல், காதலுக்கு மரியாதை செய்வதுபோல் இருந்தாலும் 90'S கிட்ஸின் பரிதாப நிலையை காட்டுவதாக அமைந்துள்ளது.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அது 28 வயதான, 'போலு' என்ற இளைஞரின் வாழ்க்கையில் நிரூபணமாகியுள்ளது.
இதையும் படிங்க : Shocking Video:'அப்பா... Just Miss' - நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி