ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் கோவிட்டுக்கு 32 மருத்துவர்கள் உயிரிழப்பு! - தமிழ்நாட்டில் கோவிட்டுக்கு 32 மருத்துவர்கள் மரணம்

தமிழ்நாட்டில் கோவிட் இரண்டாம் அலையில் 32 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

646 doctors succumbed to Covid doctors succumbed to Covid doctors died of covid ima list of doctors ima list of doctors succumbed to covid கோவிட் இரண்டாம் அலை மருத்துவர்கள் தமிழ்நாட்டில் கோவிட்டுக்கு 32 மருத்துவர்கள் மரணம் ndian Medical Association

author img

By

Published : Jun 5, 2021, 8:21 PM IST

டெல்லி: கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்து மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் முன்னின்று போராடிவருகின்றனர். இதற்கு மத்தியில் கோவிட் இரண்டாம் அலையில் சிக்கி நாட்டில் இதுவரை 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் 32 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தத் அதிர்ச்சி தகவல் இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association (IMA) வெளியிட்டுள்ள புள்ளிவிவர குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைநகர் டெல்லியில் அதிகபடியாக 109 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில்,

எண்மாநிலம்உயிரிழப்பு
01டெல்லி109
02பிகார்97
03உத்தரப் பிரதேசம்79
04ராஜஸ்தான்43
05ஜார்க்கண்ட்39
06குஜராத்37
07ஆந்திரா35
08தெலங்கானா34
09தமிழ்நாடு32
10மேற்கு வங்கம்30
11மகாராஷ்டிரா23
12ஒடிசா23
13மத்தியப் பிரதேசம்16
14கர்நாடகா09
15அஸ்ஸாம்08
16சண்டிகர்05
17மணிப்பூர்05
18கேரளம்05
19ஜம்மு காஷ்மீர்03
20பஞ்சாப்03
21ஹரியானா03
22திரிபுரா02
23உத்தரகண்ட்02
24கோவா02
25புதுச்சேரி01

மேலும் ஒரு மருத்துவர் எங்கு இறந்தார் என அடையாளம் காண முடியவில்லை. நாட்டில் கோவிட்-19 பரவல் முதல் அலையின்போது 748 மருத்துவர்கள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களில் மருத்துவர்களின் மரணங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 529 கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த இரு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவு, எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 2 கோடியே 86 லட்சத்து 94 ஆயிரத்து 879 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 380 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் இதுவரை 3 லட்சத்து 44 ஆயிரத்து 082 பேர் கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் தற்போது 15 லட்சத்து 55 ஆயிரத்து 248 பாதிப்பாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேநேரத்தில் குணமடைதல் விகிதமும் 93.08 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: திடீர் மூச்சுத் திணறல்- ஐசியூவில் மில்கா சிங்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.