கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சங்குட் தாலுகாவின் அருகே உள்ள குப்பரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவன் ஆறு வயது சிறுவன்.
இந்நிலையில், ஆறு வயது சிறுவன், சிறுமி வழக்கம்போல வீட்டின் வெளியே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த தென்னை மரம் சிறுவன் மீது விழுந்து விபத்துள்ளானது.
இதனால், சிறுவன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தான். சிறுமி காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைப் பெற்று வருகிறாள்.
இச்சம்பவம் குறித்து, பிலிகெரே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வயசு வெறும் நம்பர் தான்...’ இளம் நடிகர்களுக்கு சவால் விடும் அனில் கபூர்!