தெலங்கானா - சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதியான கொத்தகுடேம் - சுக்மா மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
தெலங்கானா, சத்தீஸ்கர் காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஆகியோர் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டனர். கிஸ்தாராம் பிஎஸ் என்னும் வனப்பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் நால்வர் பெண்கள் என்றும் அதில் சார்லா பகுதியின் மாவோயிஸ்ட் அமைப்பின் தளபதியான மதுவும் ஒருவர் என தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் ஆறு பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.