ETV Bharat / bharat

AP: ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து - 6 பெண்கள் உயிரிழப்பு! - Andhra Pradesh Crime news

ஆந்திரப்பிரதேச மாநிலம், காக்கிநாடாவில் ஆட்டோவில் பயணித்தவர்களை சாலையோரம் இறக்கிவிட்டுக்கொண்டிருந்த ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று மோதிய கோர விபத்தில் ஆறு பெண்கள் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 14, 2023, 8:15 PM IST

ஆட்டோ விபத்தில் ஆறு பெண்கள் உயிரிழப்பு

ஆந்திர பிரதேசம்: காக்கிநாடா மாவட்டம், தல்லாரேவு மண்டலம், சீதாராமபுரம் சுப்பராயுனிடிப்பா புறவழிச்சாலையில் இன்று (மே 14) ஆட்டோவில் ஏறிய பயணிகளை சாலையோரமாக இறக்கிவிட்டு ஆட்டோ ஓட்டுநர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஆறு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதனைக் கண்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களது சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஏனாமில் உள்ள நீலப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அனைவரும் இறால் யூனிட் ஊழியர்கள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறியும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Maharashtra: பற்றி எரியும் அகோலா நகரம் - ஒருவர் பலி.. 8 பேர் படுகாயம்.. 144 தடை உத்தரவு அமல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.