ETV Bharat / bharat

ஹைதராபாத் வெளிவட்ட சாலையில் விபத்து - 6 பேர் பலி; 4 பேர் படுகாயம் - ஹைதராபாத் சாலையில் விபத்து

ஹைதராபாத்: ஹைதராபாத் வெளிவட்ட சாலையில் இன்று (நவ. 10) காலை நடந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6 dead and 4 injured in road accident
கார் விபத்து
author img

By

Published : Nov 10, 2020, 9:45 AM IST

ஹைதராபாத் நகரின் வெளிவட்ட சாலையில் 'பாட்டி' என்று பகுதி அருகே பெங்களூருவிலிருந்து, உத்தரப்பிரதேசம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார், மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்தவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சங்காரெட்டி மாவட்ட காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான காரில் உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர். காரை வேகமாக ஓட்டிச் சென்றதே விபத்து ஏற்படக் காரணம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சோகத்தில் முடிந்த ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் - மணமகள், மணமகள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.