ETV Bharat / bharat

மதியம் 12 மணி வரை மக்களவை ஒத்தி வைப்பு! - மணிப்பூர்

இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 5வது நாளில், தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 26, 2023, 8:11 AM IST

Updated : Jul 26, 2023, 11:44 AM IST

டெல்லி: கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், கூட்டம் தொடங்கிய நாள் முதலே இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உரிய விளக்கம் அளித்து விவாதம் நடத்த வேண்டும் என்பதே எதிர்கட்சிகளின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதனிடையே, நேற்று (ஜூலை 25) கூடிய கூட்டத்தொடருக்கு முன்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (INDIA) கட்சிகள் தனித்தனியே கூட்டம் நடத்தின. இதில், மணிப்பூர் விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்ப எதிர்கட்சி கூட்டணி முடிவெடுத்ததாக தகவல் வெளியானது.

இருப்பினும், அவை முதலில் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் மாலை 5 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, எதிர்கட்சி முக்கிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூட்டம் நடத்தினார். மேலும், நேற்றைய முன்தினம் நடைபெற்ற கூட்டத் தொடரில் இருந்து ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து அவர் நாள் முழுவதும் நாடாளுமன்றத்தின் வெளியே தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். அதிலும், அவருக்கு ஆதரவாக ஆம் ஆத்மி உறுப்பினர்கள் நேற்று இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, இன்று (ஜூலை 26) நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் கூட்டணி முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், “கடந்த ஜூலை 20 முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டு உள்ளது. இன்று எதிர்கட்சிகள் தரப்பில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருக்கிறோம். நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரிலும் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தயாராக இல்லை.

அதனை பிரதமர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை” என தெரிவித்தார். மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அரசு தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு நடத்தும் விதியின் கீழ் விவாதத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் எதிர்கட்சிகள் தரப்பில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தப்பட்டது. இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: "மணிப்பூர் விவகாரத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார்" - மத்திய அமைச்சர் அமித் ஷா!

Last Updated : Jul 26, 2023, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.