உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் பணியில் பல்வேறு ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களில் சுமார் 577 ஆசிரியர்கள், ஊழியர்கள் கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு, உயிரிழந்தவர்களின் பட்டியலை உத்தரப் பிரதேச தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. வருகிற மே 2 எண்ணும் நாளில் சக ஆசிரியர்கள் சற்று விலகி இருக்குமாறு தொழிற்சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா தயார் நிலை குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பணியிலிருந்து விலக இருக்குமாறு ஆசிரியர்களுக்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான தீரா வன்கொடுமை: அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!