ETV Bharat / bharat

Karnataka Accident : ஆன்மீக சுற்றுலா சென்ற போது சோகம்.. கார் விபத்தில் 5 பேர் பலி! - Car Accident in karnataka 5 dead

ஆன்மீக சுற்றுலா சென்ற போது சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Karnataka
Karnataka
author img

By

Published : Jun 6, 2023, 7:45 AM IST

Updated : Jun 6, 2023, 10:37 AM IST

யாதகிரி : கர்நாடகாவில் சாலையோரம் நின்று கொண்டு இருந்த சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில், ஆன்மீக சுற்றுலா மேற்கொண்ட குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் நந்தயாலா மாவட்டம் வெலகுடு கிராமத்தை சேர்ந்த 18 பேர், கர்நாடக மாநிலம் கலபுருகியில் நடைபெற இருந்த தர்ஹா உர்ஸ் திருவிழாவில் கலந்து கொள்ள காரில் பயணித்து உள்ளனர். அதிகாலை வேளையில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டு இருந்த சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த 15 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், சைதாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்மீக விழாவில் கலந்து கொள்ள ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் விபத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், வழக்கமான பணிகள் முடிந்ததும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், உயிரிழந்தவர்கள் முனீர் (40), நயமத் (40), ரமிசா பேகம் (50), முத்தாத் ஷீர் (12), சும்மி (13) என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் சென்றதால் கார் கட்டுப்பாட்டை இழுந்து விபத்துக்குள்ளானதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : Odisha Train Accident : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்.. இலவச ரேசன், வேலைவாய்ப்பு - ரிலையன்ஸ்!

Last Updated : Jun 6, 2023, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.